📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 18, 2026 03:03 PM

கட்சி பாகுபாடு இல்லாமல் ஒருங்கிணைந்து மீட்பு பணி; மழை பாதிப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

கட்சி பாகுபாடு இல்லாமல் ஒருங்கிணைந்து மீட்பு பணி; மழை பாதிப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

சென்னை: விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்த நிலையில், சென்னை எழும்பூர், புதுப்பேட்டை பகுதியில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்.

அவரது பேட்டி: சென்னையில் குறுகிய நேரத்தில் எதிர்பார்க்காத கனமழை பெய்தது. 20க்கும் மேற்பட்ட சுரங்கபாதையில் மழைநீர் வெளியேற்றப்பட்டது. மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வானிலை ஆய்வு மைய தகவலை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளோம். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் வேலை பார்த்து கொண்டு இருக்கிறோம். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை செய்து வருகிறோம். ஒரு சில வீடுகள் சாலை மட்டத்தை விட பள்ளத்தில் இருப்பதால் தண்ணீர் புகுந்தது.

இன்னும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெறுகிறது; மழை நீர் வடிந்த பிறகு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்படும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை முதல்வர் விஜய் இடம் மழை பாதிப்பு குறித்து அப்டேட் கொடுத்து கொண்டே இருக்கிறோம். முதல்வர் விஜய்யின் அறிவுறுத்தல், ஆலோசனையின் பேரில், எல்லோருக்கும் தனி, தனி டாஸ்க் கொடுக்கப்பட்டு துரிதமாக பணி நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.