'கட்சி தாவல் நாகரிக அரசியல் இல்லை'; சொல்கிறார் திருமா
நீலகிரி: அ.தி.மு.க.,வில் எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைவது நாகரிகமான அரசியலாக இருக்க முடியாது என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் திருமாவளவன் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வில் எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைவது நாகரிகமான அரசியலாக இருக்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் த.வெ.க,வுக்கு நல்ல பெயரை பெற்றுத்தராது; த.வெ.க., மீதான நம்பகத்தன்மையை களங்கப்படுத்தும். இது போன்ற செயலை, த.வெ.க., ஊக்குவிக்க கூடாது.
தமிழக முதல்வரின் டில்லி பயணத்தை, வி.சி.க., முழுமையாக வரவேற்கிறது. தேர்தல் வாக்குறுதிப்படி, விவசாய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய விவசாய சங்கங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், 'நிதி நெருக்கடி காரணமாக உடனடியாக அதனை செய்ய இயலவில்லை, படிப்படியாக செய்வோம்' என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.