📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 23, 2026 04:00 AM

குதிரை பேர வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

குதிரை பேர வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

புதுடெல்லி,

சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆத ரவாக வாக்களிக்க வேண்டும் என்று ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக யுடியூபர் திருநாவுக்கரசு உள்பட பலர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அனைவருக்கும் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கடந்த 4-ந்தேதி உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கவும் தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் விருந்தா பண்டாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மாலியா, வி.மோகனா அடங்கிய அமர்வு நாளை (திங்கட்கிழமை) விசாரிக்கிறது.