📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 23, 2026 09:04 PM

Vishwanath And Sons Box Office

Vishwanath And Sons Box Office

சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, சுனில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கடந்த 14ஆம் தேதி வெளியான இப்படத்துக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே கரியர் சரியில்லாமல் இருந்தது. அவர் நடித்த ரெட்ரோ, கங்குவா உள்ளிட்ட படங்கள் எல்லாம் மோசமான தோல்வியை சந்தித்தன. இந்த சூழலில்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்தார்.

படத்துக்கு சூப்பர் வரவேற்பு: சில நாட்களுக்கு முன்பு அந்தப் படம் வெளியானது. அதில் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து; இந்த வருடத்தில் சூர்யாவுக்கு இரண்டாவது வெற்றி படமாக அது அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஸ்பெஷல்: படத்தின் ஸ்பெஷலே அதன் கதையும் திரைக்கதையும்தான். ரத்தம் தெறிக்க தெறிக்க படம் பார்த்து சலித்துப்போன ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.முழுக்க முழுக்க ஃபீல் குட் படமாகவே இருந்தது. படத்தில் மொத்தமே ஒரு சண்டை காட்சிதான். அதுவும் கதையோடு ஒன்றி வந்தது கவனிக்கத்தக்கது. ஜிவியின் இசை, இயக்குநரின் மேக்கிங் என அத்தனை ஏரியாக்களிலும் படம் சூப்பராகவே இருந்தது.

மமிதா அசத்தல்: படத்தின் தூண்களில் ஒருவராக ஜொலித்தார் மமிதா பைஜூ. அவர் ஏற்றிருந்த கேரக்டர்தான் படத்தின் ஹைலைட்டே. அதனை முழுவதுமாக உணர்ந்து நடிப்பில் வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். கண்டிப்பாக இந்தப் படம் அவரது கரியரில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கும். மகா நடிகை ராதிகாவே; மமிதாவின் நடிப்பை பார்த்து அசந்துபோய்விட்டார். அதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். ஆகமொத்தம் விமர்சன ரீதியாக படம் ஏகோபித்த ஆதரவை பெற்று சூர்யாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் நிம்மதியை கொடுத்திருக்கிறது.

வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் படம் டபுள் பாசிட்டிவ்தான். ரிலீஸான சில நாட்களிலேயே அப்படம் 50 கோடி ரூபாய், 100 கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்தது. இந்நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி இதுவரை உலக அளவில் மொத்தம் 200 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறதாம். இந்த வருடத்தில் சூர்யாவின் படம் தொடர்ச்சியாக இரண்டாவது முறை 200 கோடி ரூபாயை தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.