📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 03:33 AM

கூட்டுறவு வங்கி கடன்களுக்கு முழுமையான தள்ளுபடி: பாமக வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கி கடன்களுக்கு முழுமையான தள்ளுபடி: பாமக வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கி கடன்களுக்கு முழுமையான தள்ளுபடி: பாமக வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று சென்னையில் அளித்த பேட்டி: விவசாயிகள் மிகப்பெரும் பிரச்னைகள், கடன் தொல்லைகளில் இருக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் இல்லை, இதைபோன்ற பிரச்னைகளால், தினமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை இருக்கிறது.

இப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றால், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இதை விவசாயிகள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் படிப்படியாக பூரண மதுவிலக்கை, கொண்டு வர வேண்டும். இவைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.