கவின், நயன்தாரா ஜோடி ரசிகர்களை கவர்ந்ததா?
கவின், நயன்தாரா ஜோடி ரசிகர்களை கவர்ந்ததா? - ‘ஹாய்’ திரைப்படம் எப்படி இருக்கு?
விக்ரம் படத்தில் ‘போர்க்கண்ட சிங்கம்’, லியோ படத்தில் ‘நான் ரெடி’ உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ள விஷ்ணு எடவன் ’ஹாய்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
Published : August 28, 2026 at 1:54 PM IST
சென்னை: கவின், நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹாய்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஹாய் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஆன்லைன் விமர்சகர் கிறிஸ்டோஃபர் கனகராஜ் இப்படம் குறித்து வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “நடிகர் கவினின் இயற்கையான நடிப்பு கவர்கிறது. நயன்தாரா புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார். பிரபு, பாக்யராஜ், ராதிகா, சத்யன், கதிர் ஆகியோர் நன்றாக நடித்துள்ளனர். முதல் பாதி எப்போதும் சொல்லப்படும் கதையாக உள்ளது. இரண்டாம் பாதி எமோஷன் காட்சிகளுடன் உள்ளது. மொத்தத்தில் சுமாரான குடும்ப திரைப்படம்” என கூறியுள்ளார்.
#Hi - Natural Perf frm Kavin. Refreshing Nayan. Prabhu, Bhagyaraj, Radhika, Satyan, Kathir Gud. Music Compliments. Routine Story. Avg 1st Hlf; Takes its own time & Picks up 1nly during Pre Interval. Fun & Emotional 2nd Half with a Melodramatic Finish. A Decent, NEAT Family Drama!
மற்றொரு தனியார் ஊடகம் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “நயன்தாரா, கவின் இருவரையும் ஒன்றாக திரையில் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் எழுத்து மற்றும் திரைக்கதையில் புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே பல படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகளே உள்ளது. ராதிகா, பாக்யராஜ், மற்றும் பிரபு போன்ற அனுபவ நடிகர்கள் இருந்தும், இந்த காதல் கதை யூகிக்கப்படும் வகையில் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
#Hi Review: Hi to an Outdated Template#Nayanthara and Kavin look good together, and the film is visually fine. But the writing and screenplay brings zero freshness, recycling a romantic template seen countless times.Even a fine cast like Radhika, Bhagyaraj, and Prabhu are… pic.twitter.com/RmD8jrsDOb
ஹாய் திரைப்படம் குறித்து ஆன்லைன் விமர்சகர் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “இயக்குநர் விஷ்ணு எடவன் திரைப்படம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எளிமையான கதையாக இறுதிவரை சென்றது. வசீகரிக்கும் கதாபாத்திரத்தில் கவின் மற்றும் நயன்தாரா இருவரும் நன்றாக நடித்துள்ளனர்.
ஜென் மார்ட்டின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. நடிகர்கள் பிரபு, ராதிகா மற்றும் மறைந்த பாக்யராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் மூலம் எளிமையான காட்சிகளை மேம்படுத்துகின்றனர். மொத்தத்தில் ஹாய் திரைப்படம் பிடித்தமான படமாக அமைந்துள்ளது” என கூறியுள்ளார்.
#Hi has been watched. As someone who loves well-made romcoms, this @VishnuEdavan1 film put a huge smile on my face. Such a simple film that remains simple till the very end, and that is quite the difficult feat to pull off. #Nayanthara is super lovely and wonderful, and… pic.twitter.com/Sab2saLZKt
மற்றொரு தனியார் ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “முதல் பாதியில் ஏற்கனவே பல படங்களில் வந்த காட்சிகளே உள்ளது. புதியதாக காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியிலும் அதேபோன்று யூகிக்கும் வகையிலான காட்சிகளே உள்ளது. நடிகர்கள் மட்டுமே இந்த படத்தில் புதியவர்கள். தியேட்டரில் பார்க்க வேண்டிய அளவிற்கு படத்தில் ஒன்றும் பெரியளவில் இல்லை” என கூறியுள்ளார்.
#HiMovie - ⭐️⭐️⭐️1/2, a warm feel-good romantic family drama that is old school and progressive. Could’ve been more deeper but sufficiently entertaining . Innocent @Kavin_m_0431 is a big plus as we have seen the serious himself in many films , #Nayanthara is humorous and… pic.twitter.com/LHdghtYIYq
கவின் நயன்தாரா திரைப்படம் குறித்து மற்றொரு ஆன்லைன் விமர்சகர் ராஜசேகர் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “ஃபீல் குட் டிராமா ஃபேமிலி டிராமாவாக ’ஹாய்’ திரைப்படம் கவர்கிறது. ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ளது. படத்திற்கு கவின் பெரும் பாசிட்டிவ், நயன்தாரா எனர்ஜியுடன் திரையில் தோன்றுகிறார். இயக்குநர் விஷ்ணு எடவனுக்கு இப்படம் நல்ல அறிமுகம்” என கூறினார்.
ரௌடி பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கவின், நயன்தாரா, பிரபு, பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த ‘ஹாய்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.