📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology June 24, 2026 09:00 AM

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்: தமிழர் வாழ்வைத் தழுவிநடக்கிறது உன்தமிழ்..

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்: தமிழர் வாழ்வைத் தழுவிநடக்கிறது உன்தமிழ்..

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

துன்பம் போன்ற இன்பம்

கவியரசே! பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வைத் தழுவிநடக்கிறது உன்தமிழ். கீற்றுக் கொட்டகைக்கு கிரீடம் சூட்டியது உன்பாடல். பாமரர் நாவில் பழமொழியானது உன்பல்லவி மொழியின் சகல செளகரியங்களையும் பாட்டுக்குள் பரிமாறியவன் நீ.

தமிழுக்கு ஆயுள் அதிகம்

கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா!. இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதய்யா உன் தமிழைப் பிரிக்க முடியாதய்யா. உன் நூற்றாண்டை இன்று தொடங்குகிறாய்; நாங்கள் நிறைவுசெய்வோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.