📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 05, 2026 08:30 AM

லீ குவான் யூவின் பேனா ஏலம்; மதிப்பு $50,000ஆகக் கணிப்பு

லீ குவான் யூவின் பேனா ஏலம்; மதிப்பு $50,000ஆகக் கணிப்பு

சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்குச் சொந்தமாக இருந்த மோன்ட்பிளாங்க் (Montblanc) பேனா ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது.

வெள்ளி நிறத்திலான இந்த ‘ஃபவுன்டன்’ பேனா திரு லீ, மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்துடன் தொடர்புடையதாகும். இதில் ‘SM Lee Kuan Yew’ (மூத்த அமைச்சர் லீ குவான் யூ) என்ற ஆங்கில வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்தப் பேனாவின் மதிப்பு 30,000லிருந்து 50,000 வெள்ளி வரை இருக்கும் என்று ஏல நிறுவமான ஹோட்லோட்ஸ் கணித்துள்ளது. பேனாவை புக்கிட் மேராவில் உள்ள ஹோட்லோட்ஸ் செலரூம் வளாகத்தில் நேரில் காணலாம்.

இந்தப் பேனாவுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்கியது. இணையத்தில் இடம்பெறும் ஏலம் இம்மாதம் 16ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நிறைவுறும்.