📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 01, 2026 04:00 PM

திருச்சியில் முதல்வர் விஜய்; வரவேற்ற மதிமுக எம்.பி துரை வைகோ | Live updates

திருச்சியில் முதல்வர் விஜய்; வரவேற்ற மதிமுக எம்.பி துரை வைகோ | Live updates

``திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா... மதிமுக ஒரு தனி இயக்கம்!" - துரை வைகோ | Live updates

இன்றைய அரசியல் நிகழ்வுகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்... வாங்க! | Live Updates

``திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழுவில் கூடி முடிவெடுப்போம். மதிமுக ஒரு தனி இயக்கம். எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது அவர்களின் தனிப்பட்ட முடிவு" - திருச்சியில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற மதிமுக எம்.பி துரை வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி!

திருச்சியில் முதல்வர் விஜய்; வரவேற்ற மதிமுக எம்.பி துரை வைகோ

முதல்வர் விஜய், திருச்சிக்கு விரைந்திருக்கிறார். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருக்கும் அவரை, திருச்சி விமான நிலையத்தில் மதிமுக எம்.பி துரை வைகோ உள்ளிட்டோர் வரவேற்றனர். அணிவகுப்பு மரியாதையை ஏற்று, மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்துக்குச் செல்கிறார் முதல்வர் விஜய்.

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவா? - மத்திய அரசு திட்டம்?

மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதா, பெரும்பான்மை கிடைக்காமல் எதிர்க்கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு மீண்டும் அந்த மசோதாவைக் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நீதிபதி மோகனாவிற்கு விஜய் வாழ்த்து

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து...

மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்களின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.

மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

டெல்லி செல்லும் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அங்கே பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்திப்பது அவரது பிளான் என்று கூறப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்று ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும் அண்ணாமலைக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை. பிரசாரத்தில் மட்டும் தலைகாட்டிவிட்டுச் சென்றார்.

இந்த நிலையில், அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கிறார் என்கிற பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்காகத் தான் அவர் இந்த டெல்லி பயணம் செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பில் மும்மொழி கொள்கையை உடனடியாக கட்டாயமாக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தது தான் இந்தப் பேச்சிற்கு இன்னும் வலு சேர்க்கிறது.

நெல்லை வண்ணார்பேட்டையில் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்.!

திருச்சி செல்கிறார் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நின்று களம் கண்டார்.

இந்த இரண்டு தொகுதிகளிலுமே மக்கள் விஜயைத் தான் தங்களது எம்.எல்.ஏவாக தேர்வு செய்தனர்.

ஆனால், ஒரே ஒரு தொகுதியில் தான் எம்.எல்.ஏவாகத் தொடர முடியும் என்கிற நிலையில், திருச்சி கிழக்கில் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய ஆட்சி பொறுப்பேற்று முடித்த பிறகுமே, இன்னும் தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

ஆக, இன்றைய தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான செய்திகளை இந்த 'Live Blog'-ல் தெரிந்துகொள்ளுங்கள்.