புது கார் வாங்குற ஐடியா இருக்கா.. உடனே கார் ஷோரூம்
புது கார் வாங்குற ஐடியா இருக்கா.. உடனே கார் ஷோரூம்-க்கு கிளம்புங்க.. விலை தாறுமாறா உயர போகுது!

இந்தியாவில் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி அனைத்து கார் மாடல்களின் விலையையும் ஜூன் 2026 முதல் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் விலை உயர்வு, இறக்குமதி பொருட்களின் விலை உயர்வு என நாட்டில் ஒட்டுமொத்தமாக உற்பத்தி பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள காரணத்தால் உணவு பொருட்கள் நிறுவனம் முதல் கார் தயாரிப்பு நிறுவனம் வரையில் அனைவரும் தங்களுடைய தயாரிப்புகளின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மாருதி சுசூகி, ஒரு வாகனத்துக்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு மக்களின் சேமிப்பை நேரடியாக பாதிக்கும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால் பட்ஜெட் கார் வாங்கும் சாமானிய மக்கள் இரண்டு பக்கத்தில் இருத்து பாதிப்பை ஏதிர்கொள்ள நேரிடும்.

மாருதி சுசூகி-யின் இந்த விலை உயர்வு முடிவை எடுக்க முக்கிய காரணம், வாகனம் தயாரிக்கத் தேவையான உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது தான். பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிற்சாலை செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிறுவனம் இந்த விலை உயர்வு அல்லது செலவு அதிகரிப்பை தவிர்க்க விலையை உயர்த்தி ஈடுக்கட்ட முடிவு செய்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் கடந்த சில மாதங்களாக செலவுகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இருப்பினும், தற்போது செலவுகள் அதிகமாக இருப்பதால், லாபத்தை தொடர்ந்து இழக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் கார்களின் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும் மாருதி சுசூகி வழக்கம் போல் 30000 ரூபாய் விலை விலை உயர்வை அனைத்து கார்களுக்கும், மாடல்களுக்கு சமமாக விதிக்காது. கார் மற்றும் அதன் வகை அடிப்படையில் விதிக்கும், அதிகப்படியான விலை உயர்வு அளவு தான் 30000 ரூபாய். இதன் மூலம் ஒவ்வொரு மாடலின் அடிப்படையில் விலை உயர்வு மாறுபடும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் உயர் அதிகாரிகள் உடன் பல உள் நிர்வாக ஆலோசனை கூட்டத்தை கடந்த 2 வாரங்களாக நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை குறைக்கும் விதமாக ரெப்போ விகிதத்தை உயர்த்தும் திட்டம் ஆர்பிஐ-க்கு உள்ளது.

இதனால் ரெப்போ விகிதம் உயரும் பட்சத்தில் கார் லோனுக்கான ஈஎம்ஐ-யும் அதிகரிக்கும். இதோடு இந்த 30000 ரூபாய் விலை உயர்வும் கூடுதல் சுமையாக மாறும். இதைவிட முக்கியமான விஷயம் மாருதி சுசூகி விலை உயர்வு அறிவிப்பை தொடர்ந்து மற்ற கார் நிறுவனங்களும் விலையை விரைவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்த கார் உற்பத்தி - விற்பனை சந்தை இதன் மூலம் பாதிக்கப்பட உள்ளது.