📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology May 27, 2026 11:33 PM

ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ3.5 கோடி போனஸ்: சாம்சங் நிறுவனம் தாராளம்

ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ3.5 கோடி போனஸ்: சாம்சங் நிறுவனம் தாராளம்

சியோல்: பிரபல சாம்சங் நிறுவனம், சிப் பிரிவில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் 3.5கோடி ரூபாய் போனஸ் வழங்க உள்ளது.

இன்றைய நிலையில் ஏஐ தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால், பன்னாட்டு நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்தி வருகின்றன.

ஏஐ தகவல் மையங்களுக்கு சிப்கள் அதிகம் தேவைப்படுவதால், சாம்சங் நிறுவனத்தின் சிப் உற்பத்தி அசுரவளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 49 மடங்கு அதிகரித்து உள்ளது.

இதனால், போனஸ் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கூறினர். இல்லாவிட்டால் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக மிரட்டல் விடுத்தனர். உலகளாவிய அளவில் சிப்களின் தேவை அதிகம் தேவைப்படுவதால், தொழிலாளர்கள் போராட்டம் உற்பத்தியை பாதிக்கும் என்பதால், லாபத்தில் பங்கு வழங்க சாம்சங் நிறுவனம் முன்வந்தது.

இதன்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் 340,000 அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் ரூ.3.25 கோடி) போனஸ் வழங்கப்பட உள்ளது.

78 ஆயிரம் பேர் பணியாற்றும் சிப் பிரிவில் தொழிற்சங்கத்தினர் நடத்திய ஓட்டெடுப்பில் 73.7 சதவீதம் பேர் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.