📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 16, 2026 05:02 AM

Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2

Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2

Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?

விவோ செல்போன் நிறுவனம், தனது புதிய S2 மாடல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்காக வெளியிட்டது. கடந்த 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த செல்போனின் விற்பனை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக உள்ள விவோ நிறுவனம், தனது புதிய மாடலான S2-வை கடந்த 6-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், அந்த மாடலின் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த போன் குறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.

விவோ S2-ன் சிறப்பம்சங்கள்

இந்த S2 ஸ்மார்ட்போனில், MediaTek Dimensity 7360-Turbo processor j பொருத்தப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, 50 mp சோனி மெயின் சென்சாரும், 2 mp செகண்டரி கேமரா மற்றும் முன்புறத்தில் 32 mp கேமரா போன்ற வசதிகளை கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமராவில் 4K வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மேலும், டூயல் வியூ வீடியோ, முன் மற்றும் பின்பக்க கேமராக்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பதிவுசெய்ய முடியும் என்பதால், இது வ்லாக்ஸ், நேர்காணல்கள், பயிற்சிகள் மற்றும் எதிர்வினை வீடியோக்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.

இதில், 3D Curved AMOLED ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. 120 HZ ரீபிரஸ் ரேட் உடன் 1.5K அல்ட்ரா கிளீயர் அமோல்டு டிஸ்பிளே (1.5K Ultra Clear AMOLED display) வசதி கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போன், 44W பிளாஷ்சார்ஜ் உடன் 7050 mAh பேட்டரியை கொண்டுள்ளது. கேமிங், Content உருவாக்கம் மற்றும் அன்றாட பயன்பாடு என அனைத்திற்கும் இந்த செல்போன் ஏற்றதாக இருக்கும். குறைவான நேரம் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டியிருப்பதால், நாள் முழுவதும் நீங்கள் தொடர்ந்து இணைப்பிலும், உற்பத்தித் திறனுடனும் இருக்க முடியும்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகச் சூழலில், தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்காக, Vivo S2-விற்கு IP68 மற்றும் IP69 தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த S2 போன் Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய OriginOS 6-ல் இயங்குகிறது. பாதுகாப்பான மற்றும் நவீனமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், இதற்கு 3 ஆண்டுகளுக்கான Android OS அப்டேட்டுகளும், 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்புப் புதுப்பிப்புகளும் வழங்கப்படுகின்றன.

8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.39,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.44,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில்க் ஒயிட் (Silk White), ரீகல் பிரான்ஸ் (Regal Bronze) மற்றும் ஷப்பையர் ப்ளூ (Sapphire Blue) என மூன்று கலர்களில் இந்த செல்போன் கிடைக்கும்.

எங்கு வாங்கலாம்.?

விவோவின் புதிய வகை S2 ஸ்மார்ட்போனை, விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், பிளிப்கார்ட், அமேசான், பார்ட்னர் சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி