📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 16, 2026 03:30 PM

lord murugan tamil god முருகப் பெருமான் தமிழரா? வடஇந்தியரா? ஆதாரம் உள்ளதா?

lord murugan tamil god முருகப் பெருமான் தமிழரா? வடஇந்தியரா? ஆதாரம் உள்ளதா?

தமிழ் கடவுள் என நாம் போற்றும் முருகப் பெருமான், தமிழர் கிடையாது. அவரது வடக்கில் பிறந்து, தெற்கில் இருக்கும் தமிழர்களால் வணங்கப்பட்டு வருகிறார் என்ற ஒரு சர்ச்சை கருத்து சமீப காலமாக சமூகத்தில் பரவி வருகிறது. இதனால் பலருக்கும் முருகன், தமிழரா? இல்லை? அப்படி அவர் உண்மையில் தமிழ் கடவுள் தான் என்றால் அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு வரலாற்று ஆய்வுகளின் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இருக்கும் ஆதாரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முருகன் பற்றி தமிழ் சொல்லும் ஆதாரங்கள் :

முருகன் தமிழரா என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், முருகன் என்ற சொல் எதை குறிக்கிறது, அது எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். முருகன் என்பது "ம், ர்,க்" என்ற மெய் எழுத்துக்கள் உகரத்தோடு சேரும் போது "முருகு" என்ற சொல் உருவாகிறது. முருகு என்றால் தமிழில் அழகு, இளமை, வலிமை என்று பொருள். அப்படியானால் முருகன், தமிழ் கடவுளாக தான் இருக்க வேண்டும். தமிழ் மட்டுமல்ல சங்க கால இலக்கியங்களிலும் முருகன் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.