📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 07, 2026 07:31 PM

லுலு மாபியா சர்ச்சை: ”செருப்படி உனக்காக ரெடி..”

லுலு மாபியா சர்ச்சை: ”செருப்படி உனக்காக ரெடி..”

லுலு மாபியா சர்ச்சை: ”செருப்படி உனக்காக ரெடி..” – குஷ்புவை வம்பிழுத்த தமிழச்சி!

‘லுலு மாபியா’ தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது சமூக ஆர்வலர் தமிழச்சி மற்றும் நடிகை குஷ்பு இடையேயான எக்ஸ் தளப் பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் தமிழச்சி, ‘லுலு மாபியா’ தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அப்போது தமிழ்நாட்டில் குஷ்பு மகளிர் ஆணையத்தின் பிரதிநிதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் குஷ்பு தலையிடத் தயங்கியதாக குற்றம்சாட்டி, அவரை விமர்சித்திருந்தார்.

இந்த பதிவுக்கு குஷ்பு கடுமையாக பதிலளித்துள்ளார். தமிழச்சிக்கு சவால் விடுக்கும் வகையில், “Vaa ma. If you have the guts come here and face me” எனக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து “செருப்படி உனக்காக ரெடி இருக்கு” என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், தன்னை விமர்சித்தவரை ‘activist’ எனக் கூறிக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்த குஷ்பு, தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அல்லது பழிவாங்கும் நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுவதாகவும் சாடியுள்ளார். தேசிய மகளிர் ஆணையம் குறித்து புரிந்துகொண்டு பின்னர் பேச வேண்டும் என்றும் தனது பதிவில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

“Dare you point fingers at me” எனக் கூறியுள்ள குஷ்பு, தன்னை யாராலும் அச்சுறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இருவரின் இந்த பதிவுகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், ‘லுலு மாபியா’ தொடர்பான பழைய சர்ச்சை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.