📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 05, 2026 12:31 AM

மாலையும் கழுத்துமாக சிக்கிய கார்த்திக்

மாலையும் கழுத்துமாக சிக்கிய கார்த்திக்

சென்னை: கார்த்திகை தீபம் இன்றைய சீரியல்ல ரேவதி வேணும்னே சந்திரகலாவை வெறுப்பேற்ற சிவனாண்டியும் முத்துவேலும் அடிவாங்கின வீடியோவை சந்திரகலாவிடம் போட்டு காட்டுறாங்க. இதை பார்த்து சந்திரகலா ஆத்திரப்பட்டு, உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால், என் கிட்டேயே அந்த வீடியோவை போட்டு காட்டுவ, இதுக்கெல்லாம் காரணம் அந்த கார்த்தி தான். நீயும் கார்த்தியும் திருடுத்தனமா சந்திக்கிறதெல்லாம் எனக்கு தெரியும், இதுக்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்கிறார்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் ரேவதி கோயிலில் தம்பதிகள் பூஜை செய்வதை பார்த்து, பூசாரியிடம் விசாரிக்கிறாங்க. இது தம்பதிகள் செய்யும் பூஜை. இந்த பூஜையை தம்பதிகள் செய்தா, அவங்கக்குள்ள சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. கணவன் மனைவி எப்பவுமே நெருக்கமாகவே இருப்பாங்க. எந்த பிரச்சனை இருந்தாலோ, இந்த பூஜை செய்வதன் மூலம் அது விலகிடும் என்கிறார். உடனே, ரேவதி கார்த்திக்கை பார்த்து, இந்த பூஜை நம்ம செய்யணும் என்கிறார். ஆனால் கார்த்திக், ரேவதி, இதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதோட மட்டுமில்லாம, இப்ப நம்ம ரெண்டும் பேரும் சேர்ந்துதான் இருக்கோம் என்பது உங்க சித்திக்கு தெரிஞ்சிருச்சு. அதனால, அவங்க நிச்சயமா நம்மளை கண்காணிச்சுக்கிட்டேதான் இருப்பாங்க. இதனால தேவையில்லாத பிரச்சனை வரும். இந்த கும்பாபிஷேக முடிவு வரைக்கே கொஞ்சம் அமைதியா இரு என்கிறார்.

நடக்கப்போவது என்ன: ஆனா ரேவதி விடாப்பிடியாக, நாம பண்ணித்தான் ஆக வேண்டும் என்பதால், வேறு வழி இல்லாம கார்த்திக் சரி என்கிறார். இந்த விஷயம் சந்திரகலாவுக்கு தெரியவர, நீங்க ரெண்டு பேரும் ஒன்றாக இருப்பதை சாமுண்டீஸ்வரியிடம் நிரூபிக்கிறேன் என ஒரு திட்டத்தை போடுகிறாள். அந்த பூஜை நடக்கிற இடத்தில், சந்திரகலா சில ஆட்களை ஏற்பாடு செய்து, அவங்க பூஜை பண்ணும்போது, அதை ஃபோட்டோவா எடுத்து, அனுப்ப சொல்கிறார். இந்த விஷயம் தெரியாத இருவரும் பூஜை செய்ய, ஒருவர் அதை போட்டோவாக எடுத்து சந்திரகலாவிற்கு அனுப்புகிறார்.

உன் பொண்ணு ஏமாத்துறா: சந்திரகலா அந்த ஃபோட்டோவை சாமுண்டேஷ்வரியிடம் காட்டி, கோவிலுக்கு அழைத்து வருகிறார். அக்கா நான் ரேவதி பத்தி எவ்வளவோ சொன்னேன் நீ தான் நம்ல, உன் பொண்ணு என்ன வேலை செஞ்சிருக்கா பாரு, உண்மையிலேயே அவங்க இரண்டு பேரும் காதலிக்கல, ஆனால், ரேவதி உன்கிட்ட வெறுப்புற மாதிரி நடிக்கிறா என்று சொல்கிறாள். இதையடுத்து, கார்த்திக், ரேவதி இருவரும் மாலையும் கழுத்துமா பூஜை செய்வதை சாமுண்டீஸ்வரி பார்த்துவிடுகிறாள்.