📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 30, 2026 08:00 AM

 'மேகதாது பிரச்னையை பேச அனைத்து கட்சி கூட்டம் கூட்டுக'

 'மேகதாது பிரச்னையை பேச அனைத்து கட்சி கூட்டம் கூட்டுக'

தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின் மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டி:

கடந்த, 2018ல் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், இரு மாநிலங்கள் இடையில் பாயும் நதிகள் அனைத்தும் தேசிய சொத்து; ஒரு மாநிலம் மட்டும் அதில் உரிமை கொள்ள முடியாது என தெளிவாக கூறியுள்ளது.​

அதற்கு விரோதமாக கர்நாடக அரசு நடக்கிறது. ​தமிழக அரசு, நம் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்னையில் உறுதியான, சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் வீரபாண்டியன்: காவிரி நீர் தொடர்பாக தீர்ப்பாயம், நீதிமன்றம், ஒழுங்காற்று குழு என எதையும் மதிக்காமல், கர்நாடக அரசு நடந்து கொள்வது, தமிழக மக்களின் மீதும், இந்திய அரசியல் சாசனம் மீதும் நடத்தப்படும் தாக்குதல். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால், நாட்டின் இறையாண்மை கேள்விக்கு உள்ளாகும்.

காவிரி உரிமை, தமிழக வாழ்வோடும், வளத்தோடும், உயிரோடும் கலந்துள்ளது. அதை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.