📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 27, 2026 11:30 PM

மேளதாளங்கள் முழங்க.. சீமான் மகளுக்கு சீர் கொண்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

மேளதாளங்கள் முழங்க.. சீமான் மகளுக்கு சீர் கொண்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமான் - கயல்விழி தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறையாக தந்தையான சீமானை அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் நாதக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சீமானின் 2-வது பெண் குழந்தைக்கு முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று சீர் கொண்டு வந்துள்ளார். தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, பல தாம்பூல தட்டுகளில் பல வகையான பொருட்களுடன் சீர் எடுத்து வந்தார். மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர் கொண்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை சீமான் தனது வீட்டின் வெளியே வந்து வரவேற்று அழைத்து சென்றார். இதையடுத்து சீமானின் மகளுக்கு தனது கையாலேயே தங்க செயினை அணிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் மகிழ்ந்தார். சீமானின் மகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொண்டு வந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.