📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 26, 2026 12:03 PM

Meesaya Murukku 2: இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் வின்னர் மீசைய முறுக்கு 2 தானா?.. முதல் நாளிலேயே சிக்ஸர்!

Meesaya Murukku 2: இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் வின்னர் மீசைய முறுக்கு 2 தானா?.. முதல் நாளிலேயே சிக்ஸர்!

சென்னை: குஷ்பு சுந்தர் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 படம் செப்டம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2017ல் ஹிப்ஹாப் தமிழா ஆதி திரையுலகில் இயக்குநராகவும் ஹீரோவாகவும் மீசைய முறுக்கு படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார்.

2017ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படம் அதிகபட்சமாக 18 கோடி வரை வசூல் செய்து ஹிட் அடித்தது. இந்நிலையில், அதன் 2ம் பாகம் நேற்று வெளியான நிலையில், இளைஞர்கள் முதல் குடும்பத்தினர் என அனைவரையும் படம் கவர்ந்துள்ளது.

அதற்கு மிக முக்கிய காரணமே படத்தின் பாடல்களான அவ ஆரா 10/10, கோயிந்தம்மா உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட் அடித்தது தான். மேலும், படமும் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படி உள்ளதால் முதல் நாளே அந்த படத்துக்கு மக்கள் கூட்டம் படையெடுத்துள்ளனர்.

மீசைய முறுக்கு 2 முதல் நாள் வசூல்: இந்தியாவில் கிட்டத்தட்ட 1530 காட்சிகளில் வெளியான மீசைய முறுக்கு 2 திரைப்படம் முதல் நாளில் 40 சதவீதம் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறின. இந்தியளவில் 3.30 கோடி வசூலை ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு 2 படம் ஈட்டியுள்ளது. டோரதி ஏ சான்றிதழ் படமென்பதால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்துடன் மக்கள் மீசைய முறுக்கு 2 படத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், காலாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹிப்ஹாப் ஆதிக்கு ஜாக்பாட் தான் என்கின்றனர்.

திரையரங்குகளில் கான்செர்ட் வைப்: லட்சுமி பாடலில் தொடங்கும் படத்தில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களாக இடம்பெற்று ரசிகர்களை தியேட்டர்களில் ஆட்டம் போட வைத்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா என 3 ஹீரோயின்களும் படத்துக்கு பெரிய பலத்தை சேர்த்துள்ளனர். கருணாஸ், பாபா பாஸ்கர், நாசர், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்த நிலையில், போட்ட பணத்தை சுந்தர். சி குடும்பம் எடுத்து விடும் என்கின்றனர்.

இந்த வாரம் வின்னர்: திரையரங்குகளில் இன்னமும் சூரியின் மண்டாடி படம் வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று வெளியான டோரதி படம் முதல் நாளில் 69 லட்சம் மட்டுமே வசூல் செய்த நிலையில், 16வது நாளில் மண்டாடி திரைப்படம் 1.06 கோடி வசூலை ஈட்டியுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு 2 இந்தியளவில் 3.3 கோடி வசூலை ஈட்டி இந்த வார பாக்ஸ் ஆபீஸ் வின்னர் ஆகும் போட்டியில் முந்தி நிற்கிறது.