மேட்டூர் அணை நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.! நீர் மட்டம் 82.13 அடியாக உயர்வு...
மேட்டூர் அணை நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.! நீர் மட்டம் 82.13 அடியாக உயர்வு...
மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 12,174 கன அடியாக அதிகரித்து உள்ளது. இது குறித்த தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போதைய நிலவரப்படி 82.13 அடியாக உள்ளது.
மேலும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 44.112 டி.எம்.சி. ஆக உள்ளது. தவிர குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி 6,179 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,555 கன அடியாக அதிகரித்திருந்தது. அதே போல அணையின் நீர்மட்டம் 81.31 அடியிலிருந்து 81.85 ஆடியாக அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையின் நீர் இருப்பு 43.82 டிஎம்சி-ஆகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.