📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 11:04 AM

மேட்டூர் அணை திறப்பு & TET தேர்வு விலக்கு: தமிழக சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

மேட்டூர் அணை திறப்பு & TET தேர்வு விலக்கு: தமிழக சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

மேட்டூர் அணை திறப்பு & TET தேர்வு விலக்கு: தமிழக சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பான மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான TET தேர்வு விலக்கு தொடர்பான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ கோவி செழியன், "டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். மேட்டூர் அணை திறப்பு குறித்து அரசு அறிவிக்க இயலுமா?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், "காவிரியில் நீர் திறப்பது மற்றும் மேட்டூர் அணையைத் திறப்பது தொடர்பாகக் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்" என்று உறுதியளித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

good news regarding the opening of the Mettur Dam will be announced soon.Water Resources Minister reply to DMK member Kovi. Chezhiyan’ question pic.twitter.com/Br1dCjnHzS

தனித் தீர்மானம்

தமிழக பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு கோரி, சட்டசபையில் அரசு சார்பில் தனித் தீர்மானத்தைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.

இந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) ஆகிய அனைத்து கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்தன.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் தொடர்ந்து, மூத்த ஆசிரியர்களுக்கான TET தேர்வு விலக்கு கோரும் இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.