ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்துவதுதான் எதிர்க்கட்சி வேலை: கே.என்.நேரு பேச்சு
ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்துவதுதான் எதிர்க்கட்சி வேலை: கே.என்.நேரு பேச்சு
சென்னை: வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பாளையங்கோட்டை அப்துல் வஹாப் (திமுக) பேசியதாவது: மாற்றத்தை தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்திருக்கிறார்கள். நவீன பிரசார யுக்தியை பயன்படுத்தி ஆட்சி அமைத்துள்ளீர்கள். தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்த திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
அமைச்சர் என்.ஆனந்த்: நாங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாள் தான் ஆகியுள்ளது. நாங்கள் அறிவித்த எல்லாமே கண்டிப்பாக செய்து தருவோம். சிலிண்டர் திட்டம் முடியாது என்றீர்கள். தற்போது அறிவித்துள்ளோம்.
கே.என்.நேரு (எதிர்க்கட்சி துணை தலைவர்): ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்துவதுதான் எதிர்க்கட்சி வேலை. அதனால்தான் நினைவுபடுத்துகிறோம்.
அமைச்சர் ஆனந்த்: மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
அப்துல் வஹாப்: எல்லா நேரத்திலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். இன்று ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றதும், ஏதேதோ பேசுகிறார்கள். தீவிரவாதிகள் என்று பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்து சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்.