📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 06, 2026 03:03 AM

மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்: 58 இடங்களில் பார்க்கிங் வசதி

மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்: 58 இடங்களில் பார்க்கிங் வசதி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடப்பதை முன்னிட்டு 58 இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து நேற்று கோயிலில் அமைச்சர்கள் ரமேஷ், நிர்மல்குமார் ஆய்வு செய்தனர். எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கருப்பையா, கோபிசன், கல்லாணை, தங்கப்பாண்டி, அறநிலையத்துறை கமிஷனர் வினய், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், கோயில் இணைகமிஷனர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வு முடிவுகள் குறித்து அமைச்சர்கள் கூறியதாவது: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். கோயில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. கும்பாபிஷேகத்திற்காக செய்ய வேண்டிய பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 58 இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப்பட உள்ளது. கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. கும்பாபிஷேகம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும் என்றனர்.