📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 06, 2026 03:33 PM

மீண்டும்.. மீண்டுமா..!

மீண்டும்.. மீண்டுமா..!

சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் சட்டசபைக்கு வெளியே தலைமைச் செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரும், அதற்கு முன்னால் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சட்டசபை கூட்டம் முடிவடைந்த போது இருவரும் நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர். அதன்பிறகு அவரவர் அலுவலகத்துக்கு சென்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தனர்.

இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்வதற்காக கார் நிற்கும் இடத்திற்கு வந்தார். அப்போது, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் காரை தனது கார் என்று நினைத்து அதில் ஏற முயன்றார்.

உடனே பாதுகாவலர்கள் நமது கார் முன்னால் நிற்கிறது. இந்த கார் இல்லை என்று தெரிவித்தனர். உடனே சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு தனது காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.

ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதும் இதே போல் உதயநிதி ஸ்டாலின் காரில் அப்போது எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றது குறிப்பிடத்தக்கது.