📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 22, 2026 07:31 PM

மீண்டும் முதலிடத்தில் சிங்கப்பூர் கடப்பிதழ்

மீண்டும் முதலிடத்தில் சிங்கப்பூர் கடப்பிதழ்

சிங்கப்பூரின் கடப்பிதழ் மீண்டும் உலகின் ஆகச் சக்திவாய்ந்த கடப்பிதழாகத் திகழ்கிறது.

சிங்கப்பூர் கடப்பிதழை வைத்திருப்பவர்கள் 192 நாடுகள்/பகுதிகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் அல்லது சென்றடைந்த பிறகு விசா பெற்றுக்கொள்ளலாம் (visa-on-arrival).

ஆக அண்மைய ஹென்லி கடப்பிதழ் குறியீட்டில் சிங்கப்பூர் கடப்பிதழ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்தக் குறியீட்டுப் பட்டியல் இவ்வாண்டு இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) வெளியிடப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் இதற்கு முன்பு ஹென்லி குறியீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்தான் பட்டியலில் ஆக அதிக இடங்கள் மாறியுள்ளனெ. அது மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றுடன் சேர்ந்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் இரண்டாம் இடத்தை வகிக்கின்றன. அந்த மூன்று நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்டு 188 நாடுகள்/பகுதிகளுக்கு எளிதில் பயணம் மேற்கொள்ள முடியும்.

பட்டியலில் சுவீடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 11 ஐரோப்பிய நாடுகள் நான்காவது இடத்தைப் பிடித்தன.

பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து குடியரசு, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகியவை நான்காவது இடத்தைப் பிடித்த நாடுகளாகும்.