📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology May 27, 2026 08:31 PM

 மின் வாகன தொழில்நுட்பம் ஜே.எஸ்.டபிள்யு.,

 மின் வாகன தொழில்நுட்பம் ஜே.எஸ்.டபிள்யு.,

புதுடில்லி: டாடா மற்றும் ஜே.எஸ்.டபிள்யு., குழுமங்கள், மின்சார வாகன மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களை உள்நாட்டில் உருவாக்க, 9,400 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளன.

சீன பேட்டரி தொழில்நுட்பங்களின் சார்பை குறைத்து, உள்நாட்டு உற்பத்தி திறனை வலுப்படுத்த இரு நிறுவனங்களும் முதலீடு செய்கின்றன. குறிப்பாக, அடுத்த தலைமுறை மின்சார கார் அமைப்புகள் மற்றும் பேட்டரிகளை உற்பத்தி செய்ய, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையங்களில் அதிக முதலீடு செய்யப்படுகிறது.

டாடா குழுமத்தின், பேட்டரி உற்பத்தி செய்யும் அக்ரடாஸ் நிறுவனம், 3,700 கோடி ரூபாய் முதலீட்டில், பெங்களூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது. பேட்டரி செல் உட்பட முழு பேட்டரியை உற்பத்தி செய்ய டாடா நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

ஜே.எஸ்.டபுள்யு., குழுமம், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 4,720 கோடி ரூபாய் முதலீட்டில், மஹாராஷ்டிராவில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளது.