📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 25, 2026 01:00 PM

"மின்துறையை மேம்படுத்த ரூ.21,512 கோடி நிதி!"

"மின்துறையை மேம்படுத்த ரூ.21,512 கோடி நிதி!"

தமிழ்நாடு மின்துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அதில், 42,808 டிரான்ஸ்பார்மர்கள் 25 ஆண்டுகள் கடந்தவை.

தமிழ்நாட்டில் உடனடியா 231 துணை மின் நிலையங்களை உடனடியாக தொடங்க உள்ளோம்.

மின்சாரத்துறையில் ரூ.21,512 கோடி செலவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உள்ளோம்.

திமுக கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் எந்த மின் உற்பத்தி திட்டங்களும் தொடங்கவில்லை.

கட்சி நிதி கொடுத்தவர்கள் புகாரளிக்கலாம், அவர்களிடம் பணத்தை பெற்று திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சாரத்துறையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணியிட மாற்றத்தில் வெளிப்படை தன்மை இருக்கும், முறையாக அணுகினால் டிரான்ஸ்பர் கிடைக்கும்.

முந்தைய அரசு மின்சாரத்துறை ஊழியர்களை மிக மோசமாக நடத்தியுள்ளது. 411 பேருக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது, பலருக்கு பணி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியில் கட்சி நிதி கொடுக்காமல், ஒரு பணியிட மாற்றம் கூட நடக்காது, ஆனால் தவெக ஆட்சியில் அப்படி இல்லை.

தவெக ஆட்சியில் கட்சி நிதி இல்லை. சுமார் 3000 பேருக்கு பணியிட மாற்றம் கொடுத்துள்ளோம். கடந்த ஆட்சியாளர்கள் கண்ணுக்கு தெரியாமல் நியமனங்கள் செய்துள்ளனர். இனி அப்படி இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.