📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 07:04 PM

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு ஆதரவு... பா.ம.க தாமதத்தின் பின்னணி!

சீனியர்கள் மீது கடுப்பில் இருக்கிறார். ‘மிசா விவகாரத்தைச் சட்டமன்றத்தில் பேசி வசமாகச் சிக்கினார் முதல்வர் விஜய். அந்த நேரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவும் தீயாகப் பரவி த.வெ.க-வைத் திணறடித்தது.

“அடேங்கப்பா... 1,000 கோடி முறைகேடா?” என்றபடி அச்சுக்குத் தயாரான கவர் ஸ்டோரியை கண்களை அகல விரித்துப் படித்துக்கொண்டிருந்த கழுகாரிடம், ஃபாரின் சாக்லேட்டுகளை நீட்டினோம். “லண்டன் சாக்லேட்டா...” என்று ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்டவர், சாக்லேட்டை ருசித்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார்.

“பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவிலிருந்து த.வெ.க அரசு பின்வாங்க முடிவெடுத்திருக்கிறது என்று சொன்னேன் அல்லவா... அதிலும் ஸ்கோர் செய்யத் திட்டமிட்டிருக்கிறது ஆட்சி மேலிடம். ‘மீனவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பவன் இந்த விஜய்... பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படாது’ என முதல்வரைப் பேசவைத்து, ‘மீனவர்களின் தோழன் விஜய்’ என பிராண்டிங் செய்யத் தயாராகிறார்கள். இல்லாத ஒரு பிரச்னையை உருவாக்கி, பின்னர் அதை இல்லை என அறிவித்து, அதன் மூலம் பொலிட்டிக்கல் மைலேஜை உயர்த்திக்கொள்வதுதான் த.வெ.க-வின் புது ஸ்ட்ராட்டஜிபோல...”

“அது சரி... இடைத்தேர்தல் நிலவரம் என்ன?”

“தாராபுரத்தில் த.வெ.க-வினர் பீதியில் இருக்கிறார்களாம். ‘பட்டியல் சமூக மக்களுக்கான அரசு இது’ என ஓ.பி.சி சமூகத்தினர் மத்தியில் மறைமுகப் பிரசாரம் பரவிக்கிடப்பதால், ‘வெற்றிபெறுவோம் என உறுதியாகச் சொல்ல முடியாது’ என்று பதறுகிறார்கள் த.வெ.க-வினர். ‘முதல்வரைக் கட்டாயம் பிரசாரத்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று பொதுச்செயலாளர் ஆனந்த்திடம் கோரியிருக்கிறார்கள். மதுராந்தகத்தைப் பொறுத்தவரை பா.ம.க-வின் முடிவுக்காகத்தான் காத்திருக்கிறது அ.தி.மு.க.”

“அன்புமணி ஏன் தாமதப்படுத்துகிறார்?”

“அதில் நிறைய உள் விவகாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள் நாம் முழுதாகச் செல்ல முடியாது. ஆனாலும், எப்படியும் பா.ம.க-வின் ஆதரவைப் பெறுவது என்பதில், அ.தி.மு.க உறுதியாக இருக்கிறது. பா.ம.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சேலம் கார்த்தி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அன்புமணிக்கும் நெருக்கமானவர். சமீபத்தில், சேலம் இளங்கோவனுடன் எடப்பாடியைச் சந்தித்த கார்த்தி, தன் கட்சியின் தலைமை விதித்த டிமாண்டுகளைக் கூறியிருக்கிறார். அதன்படி நடந்துகொண்டால், ஆதரவுக்கரம் நீட்டப்படுமாம். இதற்கிடையே, ‘தாராபுரம் நமக்கு செட்டாகாது’ என மதுராந்தகத்தைக் குறிவைத்திருக்கிறது தி.மு.க.”

“அது சரி... எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் அப்செட்டில் இருக்கிறாராமே?”

“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் ஏதோ சர்ச்சை வெடித்திருக்கிறதாமே?”

“பார் கவுன்சிலுக்கான தலைவர், துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல், செப்டம்பர் 16-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஸ்வீட் பாக்ஸ் விநியோகமெல்லாம் நடந்திருக்கிறது. ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த திடீர் போலீஸ் ரெய்டில், ஸ்வீட் பாக்ஸுகளை அள்ளிக்கொண்டு போய்விட்டதாம் போலீஸ். விவகாரம் ஆட்சி மேலிடம் வரை செல்லவும், ஒரு மாண்புமிகு தலையிட்டுத்தான் பிரச்னையை பைசல் செய்திருக்கிறார்” என்ற கழுகாருக்கு, மதுரை ஜிகர்தண்டாவைக் கொடுத்து விட்டு, மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விவகாரத்துக்குள் இழுத்தோம். ஜிகர்தண்டாவை உறிஞ்சிக் குடித்துவிட்டுத் தொடர்ந்தார் கழுகார்.

“கோயில் கும்பாபிஷேக ‘பாஸ்’ வழங்குவதில் எக்கச்சக்க குளறுபடிகள் நடந்திருக்கின்றனவாம். ‘பவர்’ மாண்புமிகுவின் ஆதரவாளர்களே அனைத்து பாஸ்களையும் வாங்கி, தூங்கா நகரத்திலுள்ள ஹோட்டல்கள், கடைகளில் வைத்து ‘பிளாக்’கில் விற்றிருப்பதாக நாலாபுறமிருந்தும் குமுறல்கள் றெக்கை கட்டியுள்ளன. 4,000 ரூபாய் வரை ஒவ்வொரு பாஸையும் விற்றிருக்கிறார்களாம். ‘பவர்’ மாண்புமிகு எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதியின் மா.செ-தான், இந்த பாஸ் விற்பனைக்கு ஏஜென்ட்டாக இருந்ததாகத் தகவல். மாண்புமிகு உஷாராகவில்லை என்றால், அவர் பெயரை சீரழித்துவிடுவார்கள் சுற்றியிருப்பவர்கள்.”

“முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் கொதித்துவிட்டாராமே!”

“ஆமாம். அறங்காவலர்குழுவின் தலைவரும், பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி, ‘கும்பாபிஷேகத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது’ என்று சொன்னதால், அறங்காவலர்குழுவை ராஜகோபுரத்தின் அருகிலேயே விடவில்லையாம். அமைச்சர் நிர்மல் குமார் தலையிட்டுத்தான், ருக்மணி அம்மையாரை முதல் வரிசையில் அமரவைத்திருக்கிறார். இரவு 12 மணிக்கே வந்த பக்தர்கள், கும்பாபிஷேகம் முடியும் வரை காத்திருந்துவிட்டு, ‘வி.ஐ.பி-களுக்காகத்தான் இந்த கும்பாபிஷேகம் நடக்கிறது’ என்று வெறுப்புடன் கிளம்பியிருக்கிறார்கள். பொதுமக்கள் மீது தீர்த்தம்கூடத் தெளிக்கப்படவில்லையாம்.”

“கஷ்ட காலம்தான்...”

“வேதாந்தாவின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும், ஓராண்டு வரை சி.எஸ்.ஆர் நிதி மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தனர். அதன் பிறகு விரக்தியில் கைவிட்டனர். இப்போது புதிதாக அமைந்துள்ள த.வெ.க அரசின் ஆதரவோடு மீண்டும் ஆலையை இயக்கலாம் என வேதாந்தா திட்டமிட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சி.எஸ்.ஆர் நிதி மூலம் பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார்களாம். பள்ளி, கல்லூரி, சமுதாய அமைப்புகள், விளையாட்டு அணிகள், மகளிர் மற்றும் முதியோர் நல அமைப்புகள் எனப் பல தரப்பினரிடமும், ‘என்னென்ன தேவை?’ எனப் பட்டியல் கேட்டிருக்கிறார்களாம். விரைவில் பொது நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அதில் ஆளும் தரப்பினரையும் பங்கேற்கவைக்கும் திட்டமும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.”

“காவல்துறை செய்தி எதுவுமில்லையா?”

“நிறைய இருக்கின்றன. முதல்வர் விஜய்யின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஜி.தர்மராஜன் டி.ஐ.ஜி ரேங்க்கில் இருக்கிறார். முதல்வருக்கு அவர்மீது நன்மதிப்பு ஏற்பட்டிருப்பதால், வரும் ஜனவரியில் ஐ.ஜி-யாகப் பதவி உயர்வு பெறவிருக்கும் தர்மராஜனை உளவுத்துறை ஐ.ஜி-யாக நியமிக்கலாம் எனத் திட்டமிடுகிறது ஆட்சி மேலிடம். அதற்குள்ளாக தர்மராஜனை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும் என நினைக்கிறார்களாம் காவல் உச்சப்புள்ளியும், உளவுத்துறை உச்சப்புள்ளியும்.”

“பின்னலாடை மாவட்டத்தில், மாநகர காவல் உயரதிகாரியாக இருக்கிறார், எளிமையின் அடையாளமாக வாழ்ந்த முன்னாள் மாண்புமிகுவின் பேத்தி. அவர், மாமுல் புகாரில் சிக்கியிருப்பதுதான் ஹைலைட். சட்டவிரோத ஸ்பாக்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும், நேரம், காலமின்றி பார்களை நடத்திக்கொள்ளவும் தனித்தனியாக ரேட் விதித்து, வசூலில் திளைக்கிறார். பிரபல ஜவுளி நிறுவனத்தாரின் குடும்பத்தில் நடந்த பஞ்சாயத்து இவரிடம் கொண்டு வரப்பட்டபோது, அதிலும் கட்டப்பஞ்சாயத்து செய்து பெரிதாக கல்லா கட்டிவிட்டாராம்.”

“அடக் கொடுமையே...”

“ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு நாளுக்கு நாள் வலுவடைந்துவருகிறதாம். ‘குழந்தைகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வீடியோ இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் இல்லையே...’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரிக்கு, ஆளுங்கட்சித் தரப்பினர் மூலம் வீரமணி தரப்பு நெருக்கடி கொடுத்ததாம். அதன் பிறகு, அந்தச் சிறுமியைக் கண்டுபிடித்து சென்னை போலீஸார் வாக்குமூலம் வாங்கிவிட்டார்களாம். வீரமணிக்கு உதவியவர்களும், சிறுமிகளைத் தவறாக நடத்தியவர்களும் அடுத்தடுத்து சிக்கப்போகிறார்கள்” என்று கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்,

“வண்டலூர் உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் பணியைத் தனக்கு வேண்டியவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் சம்பந்தப்பட்ட துறையின் மாண்புமிகு. ‘உனக்குக் கிடைக்கும் லாபத்தில், பாதியை நான் சொல்பவருக்குக் கொடுத்துவிட வேண்டும். அதற்காக அவரை பார்ட்னராக்கிக்கொள்ள வேண்டும்’ என்பது மாண்புமிகு போட்டிருக்கும் உத்தரவாம்...”

‘‘இதேபோல தமிழகத்தின் மான்செஸ்டர் மாவட்டத்தின் மாண்புமிகு, தமிழக அரசு நிர்வாகத்தில் முழுமையாகத் தலையிடுகிறாராம். மாநகராட்சி சம்பந்தப்பட்ட எந்த ஒப்பந்தப் பணி என்றாலும், அதை தான் சொல்லும் நபருக்குத்தான் கொடுக்க வேண்டும் என உத்தரவு போட்டுவைத்திருக்கிறாராம். இதனால் மாநகராட்சி கமிஷனர், ஒப்பந்ததாரர்கள் யார் வந்தாலும், லோக்கல் அமைச்சரைப் பாருங்க. அவர் சொன்னாத்தான் எதுவும் நடக்கும்’ என்று மாண்புமிகுவிடம் அனுப்பிவைக்கிறாராம்.‘‘ என்றபடி சிறகுகளை விரித்த கழுகார்,

“அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்துவரும் தமிழ் மாணவர் பாரதிதாசன், ‘இந்த அரசு கல்வி உதவித்தொகையை வழங்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார். தற்போது, தன்னுடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதுபோல ஆட்சியாளர்கள் நடப்பதாகக் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதை தற்போது தி.மு.க கையில் எடுத்து அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், படிப்பு விஷயத்தில் அரசுத் தரப்பு அலட்சியம் காட்டுவது, பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.