மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
குடும்ப அட்டை தொடர்பான குறைகள், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான பிரச்சினைகள், பொருட்கள் முறையாக கிடைக்காதது,
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2026-ம் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து 10 வட்டங்களிலும் ஒரே நாளில் இந்தக் கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் குடும்ப அட்டை தொடர்பான சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை உடனுக்குடன் களைந்து பொதுமக்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2026-ம் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து 10 வட்டங்களிலும் ஒரே நாளில் இந்தக் கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு குறைகளை நேரில் தெரிவித்து, அவற்றுக்கு உரிய தீர்வு காண இந்தக் கூட்டம் வாய்ப்பாக அமையும்.
மேலும், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் மனுக்கள் அளித்து தீர்வு பெறலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் முக்கிய நோக்கம், பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றை விரைவாக நிவர்த்தி செய்வதாகும். இதன் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு பலமுறை சென்று அலைய வேண்டிய நிலையை தவிர்த்து, தங்களது குறைகளை குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவிக்க முடியும்.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக ஏதேனும் குறைகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், வருகிற 8-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவற்றுக்கு உரிய தீர்வு காணும் வகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவற விடாமல் சரியான பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களுக்க்குள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது,
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி