📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 28, 2026 06:02 PM

மக்களே உஷார்! கனமழைக்கு எச்சரிக்கை... வானிலை அலர்ட்!

மக்களே உஷார்! கனமழைக்கு எச்சரிக்கை... வானிலை அலர்ட்!

மக்களே உஷார்! கனமழைக்கு எச்சரிக்கை... வானிலை அலர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருவதால் இன்று சென்னை,செங்கல்பட்டு,விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களுடன் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் வரும் 31 ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலையை பொறுத்த வரைக்கும் நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேலும் வருகின்ற 31 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.