📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 05:04 PM

மக்களிடம் பொய் சொல்லி ஆட்சியை பிடித்தவர் விஜய்: மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் பேச்சு

மக்களிடம் பொய் சொல்லி ஆட்சியை பிடித்தவர் விஜய்: மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் பேச்சு

மக்களிடம் பொய் சொல்லி ஆட்சியை பிடித்தவர் விஜய்: மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் பேச்சு

மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் இன்று காலை மதுராந்தகம் ஒன்றியம் கினார் ஊராட்சியில், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் தலைமையில் வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக, அப்பகுதி கிராம பெண்கள் 600க்கும் மேற்பட்டோர் திமுக கட்சியின் வண்ண பலூன்களை கையில் பிடித்தபடி வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆரத்தி எடுத்து மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து வேட்பாளர் பரந்தாமன் பேசியதாவது: உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன். மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து கோட்டைக்கு அனுப்பினீர்கள் என்றால் தவெக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2500 ரூபாய் தருகிறேன் என சொன்னீர்களே என சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் முன் நின்று கேள்வி எழுப்புவேன். பட்டதாரிகளுக்கு நான்காயிரம் ரூபாய் தருகிறேன் என்று கூறினீர்களே, ஆட்சிக்கு வந்த பிறகு மதுராந்தகம் தொகுதி இளைஞர்களுக்கு 4 ஆயிரம் எங்கே என கேள்வி எழுப்புவேன். ஏரி வேலை செய்து 4 வாரம் ஆகிறது. ஆனால் கூலி வழங்கவில்லை. எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால் உங்களது பிரச்னைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன். சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்.

தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார் என்றால் அதற்கு என்ன காரணம், வேறு எந்த காரணமும் கிடையாது. இந்த பெட்டி ஒன்றுதான் காரணம். மக்களிடம் பொய் சொல்லி ஆட்சியை பிடித்தவர் விஜய். இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து வேட்பாளர் பரந்தாமன். கேகேபுதூர், இருசமநல்லூர், முள்ளி, அருங்குணம், சோழன் தாங்கல், தேவாதூர், மாரிபுத்தூர், கீழ்பட்டு, தச்சு, குன்னத்தூர், தருமபுரம், கீரல்வாடி உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். காஞ்சிபுரம் செல்வம் ஜி.செல்வம், முன்னாள் எம்எல்ஏ பனையூர் மு.பாபு, மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தேவி அரசு, அவைத்தலைவர் சசிகுமார், முத்தையா, ராஜன்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.