📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 09, 2026 08:04 AM

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் கேப்டனுக்கு 10 சதவீதம் அபராதம் விதிப்பு

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் கேப்டனுக்கு 10 சதவீதம் அபராதம் விதிப்பு

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டனுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

இத்தொடரில் நேற்று முன் தினம் நடந்த 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தானை 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில் இந்தியா 1.3 ஓவரில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா அவுட் ஆனார். 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த ஷிபாலி பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் மூலம் அவுட் ஆனார். அப்போது, ஷிபாலியின் விக்கெட்டை வீழ்த்தியதை பாத்திமா ஆக்ரோஷமாக கொண்டாடினார். மேலும், அவர் ஷிபாலியை நோக்கி அவமதிக்கும் வகையில் சைகைகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஐசிசி, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுக்கு போட்டிக்கான கட்டணத்தில் 10 சதவீதம் அபாராதம் விதித்து உத்தரட்டுள்ளது.