📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 05, 2026 02:31 PM

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு...? பட்ஜெட்டில் ஏமாற்றம்!

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு...? பட்ஜெட்டில் ஏமாற்றம்!

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு...? பட்ஜெட்டில் ஏமாற்றம்!

தமிழ்நாட்டின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடாமல் இருப்பது குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தற்போதைய முதலமைச்சருமான விஜய் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மகளிருக்கான உரிமைத் தொகை கடந்த அரசு ரூ 1000 வழங்கப்பட்ட வந்த நிலையில் அதனை உயர்த்தி மாதந்தோறும் ரூ 2500 வழங்கப்படும் என்று பேசியிருந்த நிலையில் தற்போது அது குறித்தான எந்தவொரு தகவலும் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது தமிழ்நாட்டின் உள்ள அனைத்து குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த உரிமைத் தொகை குறித்து மிகுந்த எதிர்ப்பார்புடன் இருந்த அனைத்து குடும்பத் தலைவிகள் மத்தியில் இது குறித்தான நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உரிமைத் தொகையை போலவே ஒரு குடும்பத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையிலும் இது குறித்தான எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

இப்படி மகளிருக்கான அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்கள் குறித்தான எந்தவொரு தகவலும் தற்போது வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இனி வரும் நாட்களிங்களாவது இத்திட்டங்களை நிறைவேற்றுமா இந்த தவெக அரசு என்று கேள்வி எழுந்துள்ளது.