📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 14, 2026 05:03 AM

மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

சென்னை: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வு துவங்கியது; தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். சட்டசபையில் அவர் பேசியதாவது: நமது குடும்பத்தில் இருக்கும், வீட்டில் இருக்கும் பாட்டி, அம்மா, அக்கா, தங்கை பற்றிய தீர்மானம்; அவர்களுக்காக மனதில் இருந்து, இதயத்தில் இருந்து பேசுகிறேன்.

இதற்கு முன்னாடி எனக்கு கிடைத்த இடத்திற்கும், தற்போது எனக்கு கிடைத்து இருக்கும் இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள் தான் என்பதை மறுக்கவே முடியாது. அந்த நன்றி விசுவாசம், உணர்வுடன் இங்கே நின்று பேசுகிறேன். பெரிதாக பணம் இருந்துவிட்டால் ஒரு வீட்டிற்கே, பெரிய பொருளாதாரம் இருந்துவிட்டால் ஒரு நாட்டிற்கே, பெரிய பெயர் வந்துவிடும் என்று சில பேர் நினைக்கலாம்.

பெண் ஆளுமைகள்

சுந்திர போராட்டத்தில் இருந்து சமூக நீதி போராட்டம் வரைக்கும் கலந்து கொண்டவர்கள் தான் நமது தமிழக பெண்கள். கல்வி, நீதி, தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்றைக்கு தமிழக பெண்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

அரசியலமைப்பு சட்டமும் அவர்களுக்கு சம உரிமையை வழங்கி தான் இருக்கிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டாலும் ஓட்டு சதவீதத்தில் கூட பெண்கள் தான் அதிகம். 2021 சட்டசபையில் 12 பெண்கள் இருந்தார்கள். தற்போது 2026 சட்டசபையில் 23 பெண்கள் இருக்கிறார்கள். 2 மடங்கு ஆகி இருக்கிறது. சதவீத கணக்குப்படி பெரிதாக உயரவில்லை.

33 சதவீத இடஒதுக்கீடு

தாமதப்படுத்த கூடாது

543 எம்பிக்கள்

தமிழகத்தின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்கும் தீர்மானம்; அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

யார் எதிர்ப்பு? யார் ஆதரவு?

இது குறித்து சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசுகையில், '' நிர்வாக வசதிக்காக வாக்காளர் அதிகமுள்ள தொகுதிகளை மறு வரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை; அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு கொண்டு வரும் இந்த தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது.

வரும் லோக்சபா பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டசபை பொதுத்தேர்தலிலும் 3ல் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனை பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசின் தனித் தீர்மானத்தில் வரிசை எண் 3ல் கொடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மட்டும் அதிமுக ஆதரிக்கிறது,'' என்றார்.

தொகுதி மறுவரையறை குறித்து அரசின் மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேறியது. முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சட்டசபையில் முதல்வர் விஜய் உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்