மனைவியிடம் எப்படி இருக்க வேண்டும்?.. சூப்பர் ஐடியா கொடுத்த சூர்யா.. எல்லாம் ஜோதிகாவிடம் பெற்ற அனுபவம்
சென்னை: சூர்யாவும், ஜோதிகாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக திகழ்கிறார்கள். இரண்டு பேரும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு; நடிக்கவும் செய்கிறார்கள். சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக விஸ்வநாத்&சன்ஸ் உள்ளிட்ட படம் வருகிறது. ஜோதிகா ஹிந்தியில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் சூர்யாவின் பேட்டி ஒன்று சென்சேஷனல் ஆகியிருக்கிற்து.
கோலிவுட்டில் சூர்யாவும், ஜோதிகாவும் முதல்முறையாக சேர்ந்து நடித்தபோதே அவர்கள் காதலிக்க தொடங்கிவிட்டார்கள். அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவக்குமார்; சில வருடங்களில் மனம் மாறி ஒத்துக்கொண்டார். அதனையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த கையோடு ஒரு மகளும், மகனும் பிறந்தார்கள். எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கி தாயாக தன் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிள்ளைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார் ஜோதிகா.
பாலிவுட்டில் கவனம்: தனது இரண்டாவது இன்னிங்ஸை தமிழில் நல்லபடியாகத்தான் தொடங்கினார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது முழு கவனத்தையும் பாலிவுட் பக்கம் திருப்பிவிட்டார். அதுமட்டுமின்றி சூர்யாவையும் பாலிவுட்டில் கவனம் கொள்ள செய்தார். இதன் காரணமாக இரண்டு பேரும் தங்கள் பிள்ளைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால் அவர்கள் சிவக்குமாருடன் சண்டை போட்டுவிட்டுத்தான் அங்கே சென்று தங்கியிருக்கிறார்கள் என வதந்திகள் பரவின.
திட்டவட்ட மறுப்பு: அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். முதலில் ஒரு பேட்டியில் பேசிய சூர்யா, 'ஜோதிகா எனக்காக இத்தனை வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்தார். அவருக்காக நான் இப்போது மும்பையில் இருக்கிறேன் அவ்வளவுதான்' என கூறி முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் இன்னொரு பேட்டியில் பேசிய ஜோதிகா, 'எனக்கும் சிவக்குமாருக்கும் சண்டை என்று வரும் தகவல்களில் உண்மையில்லை. சொல்லப்போனால் நான் மீண்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்தபோது அவர்தான் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினார்' என்று கூறினார்.
அடுத்த படங்கள்: இரண்டு பேருமே இப்போது தங்கள் கரியரில் பிஸியாக இருக்கிறார்கள். சூர்யாவை பொறுத்தவரை அவர் நடிப்பில் விஸ்வநாத்&சன்ஸ் படம் ரிலீஸுக்கு தயாராகியிருக்கின்றது. ஆகஸ்ட் 14ஆம் தேதி அப்படம் வரவிருக்கிறது. ஜோதிகாவோ, பாலிவுட்டில் சிஸ்டம் என்ற படத்தில் கடைசியாக நடித்தார். இந்நிலையில் சூர்யாவின் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
சூர்யா கொடுத்த ஐடியா: அதாவது விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட அவரிடம், 'வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் கணவர் எந்த ரூலை முதலில் பின்பற்ற வேண்டும்?' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, 'அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மட்டும்தான் வேண்டும். பேசவேகூடாது' என பதிலளித்தார். அவரது இந்தப் பதில் அங்கே இருந்தவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், ஜோதிகாவிடம் பெற்ற அனுபவம் போல என்றும் நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.