📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 01, 2026 09:34 AM

மன்னிக்கவே முடியாத தவறு.. பிரபுதேவாவின் பரதநாட்டியத்தை வெளுத்து வாங்கிய சஞ்சீவின் மனைவி!

மன்னிக்கவே முடியாத தவறு.. பிரபுதேவாவின் பரதநாட்டியத்தை வெளுத்து வாங்கிய சஞ்சீவின் மனைவி!

சென்னை: மைக்கேல் ஜாக்சன்' என கொண்டாடப்படும் பிரபல நடன இயக்குநர் மற்றும் நடிகர் பிரபுதேவா, சென்னையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியொன்றில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ வைரலான நிலையில், அது மிகவும் தவறாக ஆடப்பட்டுள்ளதாக பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவின் மனைவி பிரீத்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

டான்ஸ் மாஸ்டர்: உடம்பை ரப்பர் போல வளைத்து நெளித்து தனது நடன அசைவுகளால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரபுதேவா. தற்போது நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பன்முகத் திறமைகளுடன் படுபிஸியாக வலம் வந்தாலும், அவரது மாஸான நடனத்தை காண்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பரதநாட்டிய வீடியோ: சமீபத்தில், சென்னை நாரத கான சபாவில் குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணன் அவர்களின் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரபுதேவா, தன் குருவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மேடையில் பரதநாட்டியம் ஆடினார். அந்த வீடியோ இணையத்தில் வெளியானது.

கொந்தளித்த பிரீத்தி சஞ்சீவ்: பிரபுதேவா ஆடிய அந்த நடனம் பரதநாட்டியத்தின் முறையான அமைப்பில் இல்லை என்றும், அவர் நடனக் கலையைக் கொச்சைப்படுத்திவிட்டார் என்றும் நெட்டிசன்கள் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில், பிரபல நடிகர் சஞ்சீவின் மனைவியும் நடனக் கலைஞருமான பிரீத்தி, பிரபுதேவாவின் இந்த நடனத்தைக் கடுமையாக சாடி உள்ளார்

மன்னிக்கவே முடியாத தவறு: அதில், கிளாசிக்கல் நடனம் மட்டும்தான் எப்போதும் தவறாக ஆடப்படுகிறது. இருந்தாலும் மக்கள் அதை எந்தக் கேள்வியும் கேட்காமல் பாராட்டுகிறார்கள். பிரபுதேவா போன்ற ஒரு லெஜெண்டரி டான்ஸர் இப்படி மன்னிக்கவே முடியாத ஒரு பெரிய தவறைச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை. அவருக்குப் பதிலாக நன்றாகப் பயிற்சி எடுத்த ஒரு புதிய நடனக்கலைஞருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அது அந்த வளரும் கலைஞருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். பிரீத்தியின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, ஒரு தரப்பினர் பிரபுதேவா பரதநாட்டியத்தின் இலக்கணங்களைத் தவறவிட்டுவிட்டார் எனப் பிரீத்திக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் பிரபுதேவாவிற்கு ஆதரவாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.