Tamil Nadu
August 12, 2026 01:03 AM
'மோல்டிங்' வணிகத்தில் முருகப்பா குழுமம்
சென்னை: சென்னையை சேர்ந்த முருகப்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும், 'டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' நிறுவனம், 'ஆரஞ்ச் கோய்' என்ற நிறுவனத்தின் 87 சதவீத பங்குகளை, 73 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி, உலோக மோல்டிங் வணிகத்தில் நுழைந்துள்ளது.
ஆரஞ்ச் கோய் நிறுவனம், ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது, துல்லியமான உலோக பாகங்களை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்குகிறது. அதாவது, மருத்துவம், பாதுகாப்பு மற்றும் தொழில் துறைகளுக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்கிறது.
இந்நிறுவனத்தின் வாயிலாக, டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் உற்பத்தி பிரிவுகளை பலப்படுத்த உதவும். அதேசமயம், அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் உதவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu