📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 11, 2026 02:33 PM

மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கு விழா: பிரமாண்டயாகசாலையில் இன்று முதல் பூஜைகள் தொடக்கம்

மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கு விழா: பிரமாண்டயாகசாலையில் இன்று முதல் பூஜைகள் தொடக்கம்

மதுரை, செப். 11–மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 17ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு பெருவிழா விற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று காலை முதல் பிரம்மாண்ட யாகசாலை பூஜைகள் கோலாகலமாகத் தொடங்குகின்றன.கோவிலில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய பூர்வாங்கப் பூஜைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை வரை தொடர்ந்து நடைபெறுகின்றன. முன்னதாக நேற்று நடைபெற்ற நிகழ்வுகளில், யாகசாலை பூஜைகளுக்குத் தலைமை தாங்கும் 16 தலைமை சிவாச்சாரியார் களுக்கான சிறப்பு வழிபாடு பொற்றாமரை குளக்கரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மேளதாளங்கள் முழங்க மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரரைத் தரிசனம் செய்தனர். மாலை வேளையில், தலைமை சிவாச்சாரியார்கள் மற்றும் யாகசாலை பூஜைகளில் பங்கேற்கும் அனைத்து சிவாச்சாரியார்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டது.இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடுகள் அதிகாரப்பூ ர்வமாகத் தொடங்குகின்றன. அதனைத் தொடர்ந்து, யானை மகால் அருகே சூரியனிடம் இருந்து யாகசாலைக்கு அக்னி வார்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் மாலை 4.35 மணிக்குத் தொடங்கவுள்ளன. ஆகம விதிகளின்படி, வரும் 17ஆம் தேதி வரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கான குடமுழுக்கு மகா தீபாராதனையும் நடைபெ றுகிறது. அதனைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்டபடி 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் கோவிலின் மகா குடமுழுக்கு கோலாகலமாக நிறைவேற்றப்பட உள்ளது.இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரருக்கு என்று தனித்தனியாக 33 வேள்வி குண்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மேலும், சித்தர் நடராஜர், உற்சவர், இரண்டு தங்க விமானங்கள், முக்குறுணி விநாயகர், சுப்பிரமணியர், சித்தி விநாயகர், ஐந்து ராஜகோபுரங்கள் ஆகியவ ற்றுக்குத் தனித்தனியாக மூன்று வேள்வி குண்டங்களும், மற்ற பரிவார தேவதைகளுக்கு நான்கு வேள்வி குண்டங்களும் என மொத்தம் 184 வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை முழுமை பெற்றுள்ளது. அங்கு புனித கலசங்களை அடுக்கும் பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், “குடமுழுக்கு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிவ ஆகம வல்லுநர்கள், 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் மற்றும் பரிஜாதர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து இந்தத் திருவேள்வி பூஜைகளைச் சிறப்பாக நடத்தவுள்ளனர்” என்று கூறினர்.