Solomon Pappaiah: பட்டிமன்ற ஜாம்பவான் சாலமன் பாப்பையா காலமானார்: தமிழ் உலகம் கண்ணீர்!
Solomon Pappaiah: பட்டிமன்ற ஜாம்பவான், பன்முகத் திறனாளர் சாலமன் பாப்பையா காலமானார்: தமிழ் உலகம் கண்ணீர்!
Solomon Pappaiah Death: பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா இன்று (செப்.11) மதுரையில் காலமானார்.
மூத்த தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா இன்று (செப்.11) மதுரையில் காலமானார்; அவருக்கு வயது 90.
வயது மூப்பு காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் ஓய்வில் இருந்தவரின் உயிர் இன்று பிரிந்தது.
1936ஆம் ஆண்டில் மதுரை, திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்தவர் சாலமன் பாப்பையா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் படித்த அவர், அங்கு விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல்வேறு கல்லூரி நாடகங்களை இயற்றி உள்ளார்.
அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே!
பேராசிரியர், எழுத்தாளர், நடிகர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் என பன்முகத் திறமை கொண்டவர் சாலமன் பாப்பையா. தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர். சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் சாலமன் பாப்பையா.
அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே.. இனிய குழந்தைகளே! என்று இவர் பேசத்தொடங்கும் பாணி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
திருக்குறள், கம்ப ராமாயணத்துக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார் சாலமன் பாப்பையா. எளியோருக்கும் புரியும் வகையில் தமிழை அனைவருக்கும் எடுத்துச் சென்றவர். திருக்குறள் கழகம், மதுரை கம்பன் கழகம் ஆகியவற்றுக்குத் தலைவராக இருந்தவர் சாலமன் பாப்பையா.
2021ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் 2000ஆம் ஆண்டு இவர் பெற்றுள்ளார். திருக்குறள் செம்மல், தமிழறிஞர், நகைச்சுவை நாவலர், முத்தமிழ் அறிஞர் என்பன உள்ளிட்ட பல்வேறு விருதுகளை சாலமன் பாப்பையா பெற்றுள்ளார்.
தான் படித்த பள்ளிக்கு நன்கொடை
தான் படித்த மதுரை ஆரப்பாளையம் மாநகராட்சிப் பள்ளிக்கு, ரூ.20 லட்சம் நன்கொடை கொடுத்தவர் பாப்பையா.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சிவகாசியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு நடுவராகப் பணியாற்றி இருந்தார். இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக 2 நாட்களாக ஓய்வில் இருந்த சாலமன் பாப்பையாவின் உயிர் இன்று பிரிந்தது.
தலைவர்கள் இரங்கல்
பன்முகத் திறனாளர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards. She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி