📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 30, 2026 08:04 AM

மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வாபஸ்?

மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வாபஸ்?

மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வாபஸ்?

Z+ பாதுகாப்பு என்பது மத்திய அரசு வழங்கும் மிக உயரிய பாதுகாப்பு வகை ஆகும். உயிருக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

Published : August 29, 2026 at 8:54 PM IST

Updated : August 29, 2026 at 9:01 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த 'இசட் பிளஸ்' பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக, தற்போது எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்ததால் எம்எல்ஏ அந்தஸ்தையும் இழந்துள்ளார்.

இந்நிலையில்தான், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை Z+ பிரிவு பாதுகாப்பில் இருந்த அவருக்கு, தற்போது Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை மேற்கொள்ளும் வழக்கமான பரிசீலனைக்கு பிறகு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பின் அம்சங்கள்

Z+ பிரிவுக்கு கீழ் சுழற்சி முறையில் தினசரி 58 வீரர்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு பாதுகாப்பு வழங்குவர். இதில் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களும் இருப்பார்கள்.

இந்த பாதுகாப்பு குழுவினருக்கு நவீன இயந்திரத் துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Z+ பாதுகாப்பு என்பது மத்திய அரசு வழங்கும் மிக உயரிய பாதுகாப்பு வகை ஆகும். உயிருக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும்.

நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில முதலமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

இசட் பிரிவு பாதுகாப்பு

'இசட் பிளஸ்' பாதுகாப்பை விட 'இசட் பிரிவு' பாதுகாப்பில் 25 காவலர்கள் குறைவாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.