📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 08, 2026 11:03 PM

முன்கூட்டியே ரூ.2,000 கோடி அனுமதி: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார்

முன்கூட்டியே ரூ.2,000 கோடி அனுமதி: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார்

சென்னை: சட்டசபையின் அனுமதி பெறாமல், சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி அனுமதி பெறப்பட்டதாக எ..வ. வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார் கூறி உள்ளார்.

சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

முந்தைய திமுக ஆட்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தபோது, கடந்த ஜனவரி 14ம் தேதியிட்ட அரசாணை வாயிலாக, விரிவான சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 80 பணிகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டுள்ளது. இது, 2026 - 27 பட்ஜெட்டில் சரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு சட்டசபையின் அனுமதி பெறப்படவில்லை. சட்டசபையின் நிதி மேலாதிக்கத்தையும், கண்ணியத்தையும் பாதித்த இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ''இது குறித்து பரிசீலித்து, உரிய முடிவெடுக்கப்படும்,'' என்றார்.