📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 05, 2026 03:31 AM

 முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா

Latest News

 முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா

Google News Tamil Latest

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு நகர தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 103வது பிறந்த நாள் விழா நடந்தது. நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நித்தியானந்தன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

பொள்ளாச்சி வடக்கு நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., அலுவலகத்தில் விழா நடந்தது. நகராட்சி தலைவர் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து தலைமை வகித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.