📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 22, 2026 03:01 AM

முதல்

முதல்

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்போதே அவரது கட்சியினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழக வெற்றிக்கழகம்

'விசில்' சத்தம்

விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2-வது மாநாட்டையும் நடத்தி தமிழக அரசியலை அதிர செய்தார். லட்சக்கணக்கான மக்கள் கூடிய அந்த மாநாடுகளை இந்தியாவே உற்று நோக்கியது. அரசியலில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்த விஜய், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளை கொள்கை தலைவர்களாக அறிவித்தார்.

முதல்-அமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்

திரையில் மட்டுமல்ல. தேர்தலிலும் விஜய் 'சர்க்கார்' அமைய மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். 'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கியது. மே 10-ந்தேதி ஆட்சி பொறுப்பேற்று, ஒரு மாதத்தை நிறைவு செய்து இருக்கும் முதல்-அமைச்சர் விஜய்க்கு இன்று (திங்கட்கிழமை) 52-வது பிறந்தநாள்.

இதுவரை, நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதல்-அமைச்சராக தனது 'முதல்' பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் நாளை அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூற இருக்கிறார்கள்.

இன்று புதிய அறிவிப்பு

முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், நல உதவிகள் வழங்க த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.