Latest News
August 03, 2026 03:33 AM
முதலையை தோளில் சுமந்தபடி காவல் நிலையம் சென்ற நபர்
முதலையை தோளில் சுமந்தபடி காவல் நிலையம் சென்ற நபர் - பீகாரில் அதிர்ச்சி
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் முதலையை தன் தோளில் சுமந்துகொண்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது....
நெல் வயலில் உலா வந்த 5 அடி நீளமுள்ள முதலையைக் கிராம மக்கள் கயிற்றால் பிடித்தனர். வனத்துறை அலுவலகத்தில் ஆட்கள் இல்லாததால், அமித் குமார் என்ற விவசாயி அந்த முதலையைத் தோளில் சுமந்தபடியே காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். முதலையை மீட்ட அதிகாரிகள் அதனை கோசி நதியில் பாதுகாப்பாக விட்டனர்....
தொடர்புடைய செய்திகள்
Latest News