📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 23, 2026 11:01 AM

முதலமைச்சர் விஜய் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

முதலமைச்சர் விஜய் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்து வருகிறார். அப்போது அவரது உரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என குறுக்கிட்டு பேசினார். இதையடுத்து, சபையில் கடும் அமளி நிலவியது.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.