முதல்வர் கோப்பை துவக்க விழா
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நேற்று துவங்கின.
பள்ளி மாணவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா துவக்கி வைத்தார். ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், ஹாக்கி விளையாட்டு தனி அலுவலர் ரோஸி முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர்கள் குமரேசன், ரஞ்சித்குமார், பிரபு, விஜயகுமார், அரவிந்தன், ஆனந்தபாபு, ஜோதிபாசு, கலைஞானம், லெனின், தீபா, கருணாகரன், பரங்குன்றம், ராஜேஷ், ராஜசேகர், பாலாஜி, பியாரா ஒருங்கிணைத்தனர்.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இறகுபந்து, கூடைபந்து, கபடி, யோகா, நீச்சல், கேரம், செஸ், ஹேண்ட்பால், சிலம்பம், டேபிள்டென்னிஸ், வாலிபால், ஹாக்கி போட்டிகளும் கிரிக்கெட் போட்டி சோலைமலை பொறியியல் கல்லுாரியிலும் கோகோ போட்டி அமெரிக்கன் கல்லுாரியிலும் நடக்கின்றன. கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நாளை (செப். 11) முதல் செப். 16 வரை நடக்கின்றன.