📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 24, 2026 09:32 PM

முதல்வர் விஜய் சைகை செய்தது மரபை மீறியது அல்ல; சபாநாயகர் அறிவிப்பு

முதல்வர் விஜய் சைகை செய்தது மரபை மீறியது அல்ல; சபாநாயகர் அறிவிப்பு

நமது நிருபர்

சட்டசபையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, முதல்வர் விஜய், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அவர் தன் உரையை முடிக்கும்போது, சபாநாயகரை நோக்கி, ''தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருந்திருந்தால், ஒரு ஆக்ஷன் செய்ய வேண்டும் என தோன்றியது. எல்லோரும் போய் விட்டனர். நீங்கள் அனுமதித்தால், அதை செய்ய விரும்புகிறேன்,'' என்றார்.

அதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி முடிவானதும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'முடித்து விட்டோம்' என்பதை, கையால் சைகை செய்தார். அதுபோல் சட்டசபையில், முதல்வர் விஜயும், 'முடித்து விட்டோம்' என்பது போல் கையால் சைகை செய்தார். அதை த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி வரவேற்றனர்.

விஜய் செய்த சைகைக்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இன்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த 'பினிஷிங்' சைகை, சபையின் மாண்பையோ மரபையோ மீறியது அல்ல. தமிழக சட்டாசபையில் நேற்று மரபை மீறி எதுவும் நடக்கவில்லை'' என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்தார்.