📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 03, 2026 01:00 AM

முதல்வர் விஜய் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது: அமைச்சர் நிர்மல் குமார்

முதல்வர் விஜய் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது: அமைச்சர் நிர்மல் குமார்

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் மக்களுக்காக மக்களை சந்தித்து பேசியிருக்கிறார். அந்த வகையில்தான் நேற்று திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசினார். அவரது உரை எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும். மக்களால் புறக்கணிப்பப்பட்டவர்கள் எதேதோ சொல்லி கொண்டுதான் இருப்பார்கள்.

9 வருடங்களாக டிடிவி தினகரன் என்ன செய்தாரோ? அதை பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து கேட்க சொல்லுங்கள். அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவது அவருக்கு நல்லது. அவருடன் சுற்றிய 50 ஆயிரம் பேரை நடுத்தெருவில் விட்டுவிட்டு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்துள்ளார்.

ஆட்சி அமைத்த 2 வாரத்தில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளிலும் உள்ள பரிச்சினைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. அரசியல் சூழ்நிலை கருதி அப்போது அக்கட்சியினர் அப்போது உறுதி அளிக்கவில்லை. இதனால் சந்திப்பு நடைபெறவில்லை.

வரும் காலங்களில் மக்கள் சந்திப்பு அதிக அளவில் இருக்கும். முதலமைச்சர் எப்போதும் அநாகரிமாக பேசியது கிடையாது. (வாயில் வந்துரும் என திருச்சியில் முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு).

குற்றம் நடந்த பிறகு, அதற்கு அரசு எப்படி செயல்கடுகிறது என்றுதான் பார்க்க வேண்டும். கலவரங்கள் போன்றவற்றில் அரசு தவறு செய்தால், அரசின் மீது தவறு சொல்லலாம். தனிப்பட்ட குற்றங்களில் அரசு எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியை விட தற்போது காவல்துறை துரிதமாக செயல்படுவதாக எங்களிடம் தெரிவிக்கிறார்கள். சட்டத்திற்கு விரோதமான அனைத்து விசயங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக-வை காலி செய்ததே எடப்பாடி பழனிசாமிதான். யாராவது திமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்வார்களா? அவர் எப்படி செய்தார் என்றே தெரியவில்லை. திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதற்கு எதிராக அதிமுக-வினர் த.வெ.க.-வில் இணைகிறார்கள். அதிமுக-வை மொத்தமாக முடிச்சு பெட்டியை கட்டி பரணில் வைத்து விடுவார்.