📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 23, 2026 11:33 PM

முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் 6 கேள்விகள்!

முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் 6 கேள்விகள்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

“ 1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?

2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?

4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?

5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?

6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?” என்று மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.