📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 23, 2026 06:34 AM

முதல்வர் விஜய்யின் முதல் 75 நாள் சாதனை; லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சி பற்றி கமென்ட் செய்து கருத்து சொல்லுங்க வாசகர்களே!

முதல்வர் விஜய்யின் முதல் 75 நாள் சாதனை; லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சி பற்றி கமென்ட் செய்து கருத்து சொல்லுங்க வாசகர்களே!

-நமது நிருபர்-

ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இன்றி பலரும் வேட்பாளர்களாகவும், எம்எல்ஏ.,க்களாகவும், அமைச்சர்களாகவும் தேர்வானது, தமிழகம் சமீப காலத்தில் கண்டிராத ஒன்று. இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் முதல்வர் விஜய் மட்டுமே.

அவர் சினிமா நடிகர், பேசுவது எல்லாம் 'பஞ்ச்' டயலாக், அரசியலுக்கு அவை சரிப்பட்டு வராது என்று தேர்தலுக்கு முன்னர் கூறியவர்கள் எல்லாம், தேர்தல் முடிவுக்கு பின்னால் பேச முடியாத அளவுக்கு வாயடைத்துப் போய் விட்டனர்.அப்படி சரித்திரம் படைத்த விஜய் முதல்வராக பதவியேற்று இன்றுடன் 75 நாட்கள் ஆகின்றன.

இந்த 75 நாட்களில் அவர் செய்த சாதனைகளில் முதன்மையானது மற்றும் பெருமைப்படத்தக்கது, லஞ்சத்தை ஒழிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளே.நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று எல்லோரும் நினைத்திருந்த வேளையில், அதை மாற்றிக்காட்ட முடியும் என்று நிரூபித்து விட்டார் முதல்வர் விஜய்.

'யாருக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள், மீறி லஞ்சம் கேட்டால் இது எங்கள் ஆட்சி என்று சொல்லுங்கள்' என்று அவர் பொது நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்தது தான் இதில் உச்சகட்டம். லஞ்சம் தொடர்பான புகார்களுக்கு தனி வாட்ஸ்அப் எண் 94981 80936 அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துறைகளில் லஞ்சத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் முழு வேகத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பலன்கள், மக்களுக்கும் கிடைக்கத் தொடங்கியுள்ளன. லஞ்சம் இல்லாமல், அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டு விட்டதாக, தனியார் பள்ளி நிர்வாகிகள் வெளிப்படையாக சொன்னதே இதற்கு சாட்சி.

லஞ்சத்தை ஒழிக்க முயற்சிக்கும் விஜய் அரசின் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன? கமென்ட் செய்து சொல்லுங்க வாசகர்களே!

* பாராட்டத்தக்கது

* ஏதோ பரவாயில்லை