📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 31, 2026 06:04 PM

மயிலாடுதுறையில் அரசு ஒப்பந்தப் பணி: எந்தெந்தப் போஸ்டிங்கிற்கு யாரெல்லாம்

மயிலாடுதுறையில் அரசு ஒப்பந்தப் பணி: எந்தெந்தப் போஸ்டிங்கிற்கு யாரெல்லாம்

மயிலாடுதுறையில் அரசு ஒப்பந்தப் பணி: எந்தெந்தப் போஸ்டிங்கிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்ட உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்ட உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சீரான மருத்துவச் சேவைகளைத் தங்குதடையின்றி வழங்கவும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் சார்பில் பல்வேறு தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள தனது அதிகாரப்பூர்வச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு சுகாதார திட்டங்களின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்) அல்லது சுகாதார ஆய்வாளர் நிலை-2, தாய் சேய் நல ஆலோசகர் (RMNCH Counselor), துணை சுகாதார செவிலியர் (ANM) ஆகிய முக்கியக் களப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மேலும், ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மைய ஆலோசகர் (ICTC Counselor), தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இயங்கும் ஆய்வக நுட்புனர் (NTEP - Lab Technician), சிகிச்சை உதவியாளர், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் (NUHM) கீழ் இயங்கும் சிகிச்சை உதவியாளர் மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் யுனானி மருந்து வழங்குநர் (Pharmacist - Unani) ஆகிய பணியிடங்களும் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

மேற்கண்ட ஒவ்வொரு பணியிடத்திற்கும் உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு, மாத ஊதியம், மற்றும் இதர நிபந்தனைகள் குறித்த முழுமையான விவரங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/ என்பதில் விரிவாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட இணையத்தள முகவரிக்குச் சென்று, விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை "செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், 7வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை - 609305" என்ற முகவரிக்கு விரைவுத் தபால் (Speed Post) அல்லது பதிவுத் தபால் (Registered Post) மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். நேரில் அளிக்கப்படும் விண்ணப்பங்களோ அல்லது பிற வழிகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் 11.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

இந்தப் பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானவை என்பதால், இவற்றுக்குக் காலப்போக்கில் பணி நிரந்தரம் செய்யக் கோர முடியாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு விரைவாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி